எனக்கு நிச்சயம் ஆகிவிட்டது... நடிகை சுனைனா அறிவிப்பு!

நடிகை சுனைனா
நடிகை சுனைனா

நடிகை சுனைனா தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்பதை உறுதி செய்துள்ளார்.

’காதலில் விழுந்தேன்’, 'சில்லுக்கருப்பட்டி’, ‘ரெஜினா’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர் சுனைனா. கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒரு நபரின் கையைப் பிடித்தபடியான புகைப்படத்தைப் பகிர்ந்து ‘லாக்ட்’ என்ற அர்த்தம் தரும் எமோஜியைப் பகிர்ந்திருந்தார். இதனால், அவர் காதலில் விழுந்தாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனை உறுதி செய்யும் வகையில், சுனைனா ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். கையில் மோதிரத்துடன் ஒருவரின் கையைப் பிடித்தபடியான புகைப்படத்துடன், ‘இதற்கு முன்பு நான் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தை சுற்றி நிறைய குழப்பங்கள் பலருக்கும் இருக்கிறது. அதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஆம்! எனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. உங்கள் எல்லோருடைய வாழ்த்திற்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in