ரசிகரின் அந்த கேள்வி... கடுப்பான ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன்

ரசிகரின் கேள்வி ஒன்றால் கடுப்பான நடிகை ஸ்ருதிஹாசன் கோபமான பதிலைக் கொடுத்துள்ளார்.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவான நபராக வலம் வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். அவ்வப்போது ரசிகர்களுடன் கேள்வி- பதிலும் வைத்து உரையாடி வருகிறார். அப்போது ஒரு ரசிகர், ’தென்னிந்திய மொழி உச்சரிப்பில் எதாவது ஒன்றைக் கூறுங்கள்’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன்

இந்த விஷயம்தான் ஸ்ருதிஹாசனை கடுப்பாக்கி இருக்கிறது. ’இதை மைக்ரோ ரேசிசமாகதான் பார்க்கிறேன். தென்னிந்தியர்களை இட்லி, தோசை, சாம்பார் என்று கூப்பிடுவது கியூட்டாக இருக்கிறது என்று நினைத்து நீங்கள் கூப்பிடுவதும் எங்களைப் புரிந்து வைத்திருப்பதும் சரியல்ல. இது தொடரும் பட்சத்தில் ‘மூடிட்டு போடா’ என்று சொல்வேன்’ எனக் கூறி இருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in