நடிகர் அஜித் காட்டும் அன்பு... உருகிய ஷாலினி!

அஜித் ஷாலினி
அஜித் ஷாலினி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷாலினியை நடிகர் அஜித் சந்தித்துள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

நடிகை ஷாலினிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனால், பதறிப்போன ரசிகர்கள் அவருக்கு என்ன ஆச்சு என இணையத்தில் விசாரித்து வந்தனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மருத்துவமனையில் இருந்து தான் நலமுடன் இருக்கும் புகைப்படத்தை ஷாலினி வெளியிட்டிருக்கிறார்.

’விடாமுயற்சி’ படப்பிடிப்பின் இறுதிக்கட்டம் தற்போது அஜர்பைஜானில் பரபரப்பாக நடந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மாத கால அளவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால், அஜித் அங்கு இருந்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்ததால் அவரால் ஷாலினிக்கு உடல்நிலை சரியில்லாதபோது கூட அருகில் இருக்க முடியவில்லை.

ஷாலினி அஜித்
ஷாலினி அஜித்

ஆனால், ஷாலினிக்கு மருத்துவமனையில் தேவைப்படும் முன்னேற்பாடுகளை சரியாக செய்து கொடுத்துவிட்டுதான் சென்றிருக்கிறார். உடல்நலக் குறைவால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். எனவே, அஜர்பைஜானில் இருந்து குட்டி பிரேக் எடுத்து நேராக ஷாலினியை மருத்துவமனையில் பார்த்திருக்கிறார் அஜித். இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஷாலினி, ‘லவ் யூ ஃபார் எவர்’ என்ற கேப்ஷனுடன் தனது அன்பைப் பகிர்ந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in