சிறைக்கு செல்ல வேண்டும்... சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த நடிகை சமந்தா!

நடிகை சமந்தா
நடிகை சமந்தா

தவறான மருத்துவ சிகிச்சைகளை சொல்கிறார் சமந்தா அதனால், அவர் சிறைக்கு செல்ல வேண்டும் என சமீபத்தில் மருத்துவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பினார். இந்த சர்ச்சைகளுக்கு நடிகை சமந்தா விளக்கம் கொடுத்தார்.

மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா அது தொடர்பான சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும், தான் எடுத்துக் கொள்ளும் சிகிச்சையைப் பற்றி சமூக வலைதளங்களில் வெளிப்படையாகவும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மூக்கில் நெபுலைசருடன் கூடிய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

மருத்துவரின் பதிவு
மருத்துவரின் பதிவு

’வைரல் மருந்து எடுக்கும் முன்பு, நீங்கள் இந்த மாற்று வழியை முயற்சி செய்து பாருங்கள். ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்யலாம்’ எனக் கூறியிருந்தார். இது தான் சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது.

சமூகவலைதளத்தில் ‘தி லிவர் டாக்’ என்ற ஐடியுடன் கூடிய மருத்துவர் ஒருவர் உடல்நலம் மற்றும் அறிவியல் குறித்த அறிவில்லாத ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சமந்தா வைரஸ் தொற்றுகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடை சுவாசிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடு ஆபத்து என்று சொல்லி, நெபுலைஸ் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறது. அப்படி இருக்கும் போது சமந்தா இதை சொல்லி இருப்பதால், அவர் சிறைக்கு செல்ல வேண்டும்’ என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

இது சர்ச்சைகளுக்கு வழிவகுத்த நிலையில், சமந்தா இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். தன்னுடைய சமூகவலைதளப்பக்கத்தில், ‘கடந்த சில வருடங்களாக தொடர்ந்து நான் உபயோகிக்கும் மருந்துகள், மருத்துவ வழிமுறைகளை நான் சுயபரிசோதனை செய்த பின்பே அடுத்தவர்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த மருத்துவ வழிமுறைகள், மருந்துகள் எல்லாம் மிக மிக விலையுயர்ந்தவை என்று தெரியும்.

சமந்தா
சமந்தா

இதை எல்லாம் என்னால் பெற முடிகிறது என்று நினைக்கும் போது நான் அதிர்ஷ்டசாலி தான். ஆனால், அதையும் தாண்டி என்னைப் போன்று உடல்நல பிரச்சினைகளால் பாதிக்கப்படும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் மாற்று வழியையும் எதிர்பார்க்கிறார்கள். அப்படியானவர்களுக்கு என் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் விஷயத்தைத் தான் நான் கூறுகிறேன். ஹைட்ரஜன் பெராக்சைடு எனக்கு பரிந்துரைத்த மருத்துவரும் எம்டி முடித்து, 25 வருடங்களுக்கு மேலாக பணியனுபவம் கொண்டவர் தான்.

சமந்தா
சமந்தா

நான் தவறாக பரிந்துரைக்கிறேன். சிறைக்குச் செல்ல வேண்டும் என்று குற்றம் சாட்டிய மருத்துவரின் பதட்டத்தையும் அவரின் நல்ல நோக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய மருத்துவரையும் அவரையும் அமர வைத்து கலந்துரையாடல் நடத்த வேண்டும். மற்றபடி, என்னுடைய நோக்கம் அடுத்தவர்களுக்கு உதவுவதே தவிர, காயப்படுத்துவது அல்ல!’ என்ற நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in