ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய 'பிரேமலு’ நடிகை; அதிர்ச்சி வீடியோ!

actress mamitha baiju
மமிதா

’பிரேமலு’ புகழ் நடிகை மமிதா பைஜூ ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ படம் மூலம் 2கே கிட்ஸூக்கு பிடித்த நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் மமிதா பைஜூ. மலையாளம் மட்டுமல்லாது, தமிழில் ஜிவி பிரகாஷூடன் ‘ரெபல்’ படத்திலும் நடித்திருந்தார். இதுமட்டுமல்லாது, முன்பு சூர்யா- பாலா கூட்டணியில் ‘வணங்கான்’ அறிவிக்கப்பட்டபோது மமிதாவும் அதில் நடிப்பதாக இருந்தது.

சரியாக நடிக்காமல், டேக் அதிகம் வாங்கியதால் பாலா தன்னை அடித்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்பு, தான் அப்படி சொல்லவில்லை என்றும் ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் என்றும் விளக்கம் கொடுத்தார். இப்போது, கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருக்கிறார் மமிதா.

அங்கு அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டிருக்கின்றனர். இதனால், கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்திருக்கிறார் மமிதா. ரசிகர்களிடம் இருந்து வெளியே வருவதற்கு அவர் பாடாய் படும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்கவும் பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் முண்டியடித்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்போடு இரு பெண்கள் மமிதாவை பத்திரமாக அந்த இடத்தில் இருந்து கூட்டி சென்றிருக்கின்றனர். தமிழில் ’ரெபல்’ படத்தை அடுத்து, பிரதீப் ரங்கநாதனுடன் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மமிதா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in