“படுக்கைக்கு கூப்பிட்டாங்க...” நடிகை இனியா பரபரப்பு குற்றச்சாட்டு!

“படுக்கைக்கு கூப்பிட்டாங்க...”  நடிகை இனியா பரபரப்பு குற்றச்சாட்டு!

பட வாய்ப்பு வழங்க தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை இனியா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த நடிகை இனியா, மௌன குரு, வாகை சூட வா, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒருநாள், புலிவால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதே போல் மலையாள படங்களிலும் நடித்தார். தற்போது வாய்ப்புகள் அதிகமாக இல்லாததால் ஒரு சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை இனியா, சினிமா துறையில் உள்ள பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வாகை சூட வா படத்திற்கு பிறகு பெரிதாக கவனம் ஈர்க்கும் படங்கள் தனக்கு அமையவில்லை என்று கூறியுள்ள அவர், இயக்குநர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் தன்னை சரிவர பயன்படுத்தாதது வருத்தம்தான் என கூறியுள்ளார்.

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் வந்தது குறித்து பேசியுள்ள இனியா, தன்னையும் சிலர் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள் என்று பகிரங்கமாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

இதுபோன்ற சிக்கல்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ள நடிகை இனியா, நமது அறைக்கு உள்ளே ஒருவர் வர கதவை திறக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். நடிகை இனியாவின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in