இது கடினமான முடிவுதான்... நடிகை ஹினா கான் உருக்கம்!

நடிகை ஹினா கான்
நடிகை ஹினா கான்

கேன்சரால் பாதிக்கப்பட்ட நடிகை ஹினா கான் தனது முடியை கட் செய்துள்ளார். இது தன் வாழ்வில் கடினமான முடிவு என்றும் கூறியிருக்கிறார்.

பாலிவுட் நடிகை ஹினா கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதை சமூகவலைதளங்களில் அறிவித்து அதிர்ச்சி கூட்டினார். மார்பகப் புற்று நோயின் மூன்றாவது நிலையில் இருப்பவர் அதற்கான சிகிச்சையை தொடங்கி இருப்பதையும் கூறியுள்ளார்.

ஹினா கான்
ஹினா கான்

இதை தான் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு வருவதாகவும் விரைவில் குணமடைந்து விடுவேன் எனவும் நம்பிக்கை வார்த்தைகள் கூறி இருக்கிறார். ஹினாவின் நிலையைப் பார்த்து வருத்தமடைந்த ரசிகர்கள் அவர் நல்லபடியாக திரும்பி வர வேண்டும் என்று சொல்லி வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில்தான், ஹினா தனது முடியை வெட்டியுள்ளதாகக் கூறியுள்ளார். கேன்சர் நோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக கீமோதெரபி செய்யப்படும். அதில் கடுமையான முடி உதிர்வு ஏற்படும். இதனை மனதில் வைத்தே அவர் தனது முடியை கட் செய்துள்ளார். இந்த முடியை வைத்து தனக்கு வரும்காலத்தில் ’விக்’ செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்து, ‘தன் வாழ்க்கையில் கற்பனை கூட செய்திருக்காத ஒன்றை என் அம்மா பார்க்கப் போகிறார். பெண்களுக்கு முடிதான் அழகு. அதை அவர்கள் எப்போதும் இழக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், சில கடினமான சூழ்நிலையில் நாம் முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கேன்சர் என்னும் போர்க்களத்தை நான் வெற்றி பெற விரும்புகிறேன். சிகிச்சையில் எப்படியும் முடியை இழக்க நேரிடும். அதனால், இப்போதை அதை கட் செய்து என் முடியில் விக் செய்ய சொல்லி விட்டேன். எப்படி இருந்தாலும் முடியும் புருவமும் மீண்டும் வளர்ந்துவிடும். தயவு செய்து எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்’ என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in