காதலில் விழுந்த நடிகை அம்மு அபிராமி... உறுதி செய்த பதிவு!

நடிகை அம்மு அபிராமி
நடிகை அம்மு அபிராமி

நடிகை அம்மு அபிராமி தன்னுடைய காதலை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

’ராட்சசன்’ படத்தில் துறுதுறு ஸ்கூல் பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அம்மு அபிராமி. பின்பு, வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் இவரது கதாபாத்திரம் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் நடித்து வந்தாலும் ‘குக் வித் கோமாளி’ சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் பார்த்திவ் மணியுடன் அம்மு அபிராமிக்கு காதல் மலர்ந்திருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பார்த்திவ் மணியுடன் எடுத்தப் புகைப்படங்களைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் மணி. பிறந்ததற்கு நன்றி, வாழ்வில் வந்ததற்கு நன்றி!’ எனக் கூறியுள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் ‘நீங்கள் காதலை உறுதி செய்ததற்கு நன்றி’ எனக் கூறி இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

நடிகை அம்மு அபிராமி
நடிகை அம்மு அபிராமி

விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகி தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியை மணி இயக்கி வருகிறார். அம்மு அபிராமி கைவசம் ‘நிறங்கள் மூன்று’, ‘ஜகதாம்பாள்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in