மறக்க முடியாத அனுபவம்... நடிகை அதிதி ராவ் வெளியிட்ட வீடியோ!

அதிதி ராவ்
அதிதி ராவ்

நடிகை அதிதி ராவுக்கு லண்டன் ஏர்போர்ட்டில் அவரது லக்கேஜ் வந்து சேராமல் இருந்திருக்கிறது. அது மீண்டும் கிடைத்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் அதிதி.

நடிகை அதிதி ராவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்தியாவில் இருந்து லண்டன் சென்றிருக்கிறார். அங்கு, ஏர்போர்ட்டில் இறங்கியதும் லக்கேஜிற்காக காத்திருந்திருக்கிறார். ஆனால், அது வந்து சேரவில்லை. இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் சொன்னபோது, அவர்கள் ஏர்லைனிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

நடிகை அதிதி ராவ்
நடிகை அதிதி ராவ்

கிட்டத்தட்ட 32 மணி நேரம் தனது லக்கேஜிற்காக லண்டன் ஏர்போர்ட்டில் காத்திருந்திருக்கிறார் அதிதி. இந்த பொறுப்பற்ற செயல்பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இப்போது தன்னுடைய லக்கேஜ் திரும்பி வந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார்.

லக்கேஜை வாங்கிவிட்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த அதிதி, ‘45 மணி நேரம் கழித்து என்னிடம் யார் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். இது எனக்கு வந்து சேர உதவிய அனைவருக்கும் நன்றி’ எனக் கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in