ஆக்‌ஷன் அதிரடி, கலகல காமெடி... வில் ஸ்மித்தின் ‘பேட் பாய்ஸ்4’ எப்படி?

'பேட் பாய்ஸ்4’
'பேட் பாய்ஸ்4’

அதிரடி ஆக்‌ஷன், கலகல காமெடி என வில்ஸ்மித் நடிப்பில் கலகலப்பாக வந்திருக்கிறது ‘பேட் பாய்ஸ்4’.

’பேட் பாய்ஸ்' பட வரிசையில் நான்காவது பாகமாக வந்திருக்கிறது 'பேட் பாய்ஸ்- ரைட் ஆர் டை’. இதன் முந்தைய பாகம் ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்’ கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. ஒரு போலீஸ் அதிரடி ஆக்‌ஷன் சாகசங்களும் அதில் நகைச்சுவையும் கலந்த கதையாக கடந்த 1995ல் ‘பேட் பாய்ஸ்’ திரைப்படம் வெளியானது. இது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்துக்கு வெற்றி வாகை சூடி அடுத்தடுத்த பாகங்களுக்கும் வழிவகுத்தது.

’பேட் பாய்ஸ்4’
’பேட் பாய்ஸ்4’

இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும் மூன்றாவது மற்றும் நான்காவது பாகத்தை இரட்டை இயக்குநர்களான அடில் மற்றும் பிலால் இயக்கி இயக்கியுள்ளனர். 'பேட் பாய்ஸ்' அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும் அட்டகாசமான நகைச்சுவையுடனும் திரும்பி வந்துள்ளனர்.

துப்பறியும் நிபுணர்கள் மைக் லோரி (வில் ஸ்மித்) மற்றும் மார்கஸ் பர்னெட் (மார்ட்டின் லாரன்ஸ்) ஆகியோர் மியாமி காவல் துறைக்குள் நிலவும் ஊழல் குறித்து விசாரிக்கின்றனர். மறைந்த கேப்டன் கான்ராட் ஹோவர்ட் (ஜோ பான்டோலியானோ) ருமேனிய மாஃபியாவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. மேலும் விசாரணை முன்னேறும்போது வில் ஸ்மித் மற்றும் மார்கஸ் பர்னெட்டை அடுத்தடுத்த சவால் துரத்துகிறது.

’பேட் பாய்ஸ்4’
’பேட் பாய்ஸ்4’

இதனால், வழக்கை முடிப்பதற்காக சட்டத்தின் எல்லைக்கு வெளியே வேலை செய்யும் நிர்பந்தத்துக்கு இவர்கள் உள்ளாகிறார்கள். பின்பு இறுதியில் என்ன நடக்கும் என்பது எதிர்பார்த்த கிளைமாக்ஸ்தான். இந்த நான்காவது பாகத்தில் ஆக்‌ஷன் காட்சிகளைக் காட்டிலும் ரசிகர்களை கிச்சு கிச்சு மூட்டும் நகைச்சுவைகள்தான் படம் முழுக்க தூவி மைக்- மார்ட்டின் ஜோடி ரசிக்க வைத்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் அதிகம் எதிர்பார்த்து வந்தவர்களுக்கு இது சற்று ஏமாற்றம் தரலாம்.

’பேட் பாய்ஸ்4’ வில் ஸ்மித்
’பேட் பாய்ஸ்4’ வில் ஸ்மித்

நடிகர்கள் குறையில்லாத நடிப்பைக் கொடுத்திருக்க, ஆக்‌ஷன், பின்னணி இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பு. கதை வேறு எங்கும் பயணிக்காமல் நேர்கோட்டில் நகர்வது ப்ளஸ். ஆனால், அதுவே அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதையும் நம்மால் யூகிக்க முடிந்த அளவிற்கு பலவீனமாக திரைக்கதையாக அமைந்திருக்கிறது. இன்னும் படத்தின் நீளத்தைக் குறைத்து ஷார்ப்பாக, லாஜிக் ஓட்டைகளை குறைத்து கொடுத்திருத்திருந்தால் ‘பேட் பாய்ஸ்’ பிழைத்திருக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in