பரபரப்பு… காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்!

நடிகர் வினோத் தாமஸ்
நடிகர் வினோத் தாமஸ்

பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் காரில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் கேரள திரையுலகில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மலையாள நடிகர் வினோத் தாமஸ் (45), தேசிய விருது பெற்ற அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்தவர். ஜூன், ஹேப்பி வெட்டிங், ஒருமுறை வந்த் பாத்தாயா, ததோலி ஒரு செரிய மீனல்லா ஆகிய படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கோட்டயம் அருகே பம்படி என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து இவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தங்களுக்கு சொந்தமான பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள காரின் உள்ளே ஒருவர் நீண்ட நேரமாக இருப்பதாக, ஹோட்டல் நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.

நடிகர் வினோத் தாமஸ்
நடிகர் வினோத் தாமஸ்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விசாரணையில் அவர் பிரபல நடிகர் வினோத் தாமஸ் என தெரியவந்தது. இதையடுத்து நடிகர் மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ஒருவர் காரில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in