ஜிஎஸ்டி, நீட், போதைப்பொருள்... மத்திய, மாநில அரசை தொடர்ந்து எதிர்க்கும் நடிகர் விஜய்?

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் இன்றைய கல்வி விருது வழங்கும் விழாவில் நீட் தேர்வு தேவையில்லை என்பதை ஆதரிப்பதாகக் கூறியிருக்கிறார்.

நடிகர், தவெக தலைவர் விஜய் பள்ளிப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி வருகிறார். இந்த நிகழ்வின் இரண்டாம் கட்டம் இன்று சென்னை, திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் விஜய் மாணவர்களுக்கான நீட் தேர்வு குறித்து எதிர்ப்பு தெரிவித்தவர், நீட் விலக்கு பற்றியும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

மாணவிகளுடன் நடிகர் விஜய்
மாணவிகளுடன் நடிகர் விஜய்

கடந்த முறை போதைப்பொருள் ஒழிப்பு பற்றி பேசி ஆளும் தமிழக அரசை எதிர்த்தவர் இந்தமுறை நீட் விலக்கு என ஒன்றிய அரசுக்கு எதிராகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் விஜய் அரசியல் கட்சியை தொடங்குவது பற்றி அறிவித்தாலும், அதற்கு முன்பிருந்தே திரைப்படங்களிலும் படங்களின் விழா மேடையிலும் அரசியல் வசனங்கள் பேசுவது என தனது அரசியல் ஆசையை இவர் வெளிப்படுத்தத் தவறவில்லை.

’சர்க்கார்’ படத்தில் தமிழக அரசு கொடுக்கும் இலவசப் பொருட்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர், ‘தலைவா’ படத்தில் தனது அரசியல் வருகையை அந்தக் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்திருந்தார். இதற்கடுத்து வெளியான ‘மெர்சல்’ படத்திலும் மோடி அரசின் ஜி.எஸ்.டி. வரியை விமர்சித்து பேசியிருக்கிறார் விஜய் என அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை பரபரப்பைக் கூட்டினார்.

இதோடு பாஜக, எச். ராஜாவும் ’ஜோசப் விஜய்’ என விஜய் மீது மதச்சாயம் பூசி விஜய்க்கு அந்த சமயம் நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால், இந்த பப்ளிசிட்டியே ‘மெர்சல்’ படம் மீது அதிக கவனம் குவிய காரணமாக அமைந்தது. மேலும், ‘மாஸ்டர்’ பட சமயத்தின் போதும் அவர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி பிபி எகிற வைத்தது. இப்படி தொடர்ந்து தனக்கு நெருக்கடி கொடுத்து வரும் ஒன்றிய அரசை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், விஜய் விமர்சிக்க தவறவில்லை.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி ஆரம்பித்தவுடன் பேசியிருக்கும் முதல் மேடையில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு நீட் தேர்வு தேவையில்லை எனப் பேசி பரபரப்பைக் கூட்டியிருக்கிறார் விஜய்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in