நடிகர் விஜயின் கல்வி விருது விழாவில் நடந்த குழப்பம்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜயின் தவெக சார்பில் பள்ளிப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு போல அதிக நேரம் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மாணவர்கள், பெற்றோர்களுக்கு நிகழ்வில் செல்ஃபோன் எடுத்துப் போக தடை விதிக்கப்பட்டது.

துபாய் செக்யூரிட்டிகளால் குழப்பம்
துபாய் செக்யூரிட்டிகளால் குழப்பம்

நிகழ்வுக்கு பாதுகாப்பிற்காக துபாயில் இருந்து செக்யூரிட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாததால் செக்யூரிட்டி மற்றும் தவெக நிர்வாகிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.

மேலும் மாணவர்கள், நிர்வாகிகள் எனத் தனித்தனியாக அடையாள அட்டை கொடுத்திருக்கிறார்கள். எந்த அடையாள அட்டை யாருக்கு எனப் புரியாமல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளையே அவர்கள் தடுத்து நிறுத்தியிருப்பதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, அறுசுவை விருந்து, நிகழ்வில் இருந்து திரும்பி செல்லும் போது மரக்கன்றுகள் என நிறைய நல்ல விஷயங்கள் இருக்கும்போது இந்த குழப்பங்களை தவிர்க்க வேண்டும் என பலரும் கருத்து சொல்லி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in