விஜய் பிறந்தநாள்...'GOAT' படக்குழு கொடுத்த அப்டேட்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டமாக ‘GOAT' படத்தில் இருந்து இரண்டாவது பாடலுக்கான அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு.

நடிகர் விஜயின் ‘GOAT' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் புரோமோஷனையும் படக்குழு தொடங்கியுள்ளது. முன்பு விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் நடனத்தில் ‘விசில் போடு’ பார்ட்டி பாடலாக யுவன் இசையில் வெளியாகி இருந்தது.

ஆனால், இந்தப் பாடல் பெரிதாக வரவேற்பு பெறாமல் போனது. இதனால், இரண்டாவது பாடலை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். நாளை விஜயின் பிறந்தநாளுக்காக இரண்டாவது பாடல் பற்றிய அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.

’சின்ன சின்ன கண்கள்’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் போஸ்டரில் நடிகர்கள் விஜய், சிநேகா, மகன் விஜய் மூவரும் இருக்கும்படி உள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் இந்தப் பாடலை யார் எழுதி இருக்கிறார்கள், பாடி இருக்கிறார்கள் என்பது பற்றிய விவரத்தை படக்குழு இன்னும் தெரியப்படுத்தவில்லை.

 'GOAT'
'GOAT'

இந்தப் பாடல் நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்தாக, மறக்க முடியாத அனுபவமாக அமையும் என இயக்குநர் வெங்கட்பிரபுவும் கூறியிருக்கிறார். குடும்ப ரசிகர்களைக் கவரும்படி இந்தப் பாடல் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in