மன வேதனை அடைந்தேன்... குவைத் தீ விபத்துக்கு நடிகர் விஜய் இரங்கல்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

குவைத்தில் நடந்த தீ விபத்து குறித்து நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்கஃப்பில் உள்ள ஆறு மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் நேற்று எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது. இதில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 தமிழர்கள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பலரையும் சோகத்திற்குள்ளாக்கியது.

குவைத் தீ விபத்து
குவைத் தீ விபத்து

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் நடிகர் விஜய் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “குவைத் நாட்டின் மங்காஃப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாடு, கேரளம் & பிற மாநிலங்களைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தீவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற வேண்டுகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in