நெஞ்சார்ந்த நன்றி - பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களிடம் நெகிழ்ந்த நடிகர் விஜய்!

தவெக தலைவர் நடிகர் விஜய்
தவெக தலைவர் நடிகர் விஜய்
Updated on
1 min read

தனது பிறந்தநாளில் வாழ்த்துத் தெரிவித்த அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் விஜய் தனது ஐம்பதாவது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடினார். கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என அவர் வலியுறுத்தி இருந்தாலும் ரசிகர்களும், தவெக கட்சி தொண்டர்களும் கொண்டாட்டங்களையும் நலத்திட்டங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நாம் தமிழர் கட்சியின் சீமான், மநீம தலைவர் கமல்ஹாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிடிவி தினகரன் என அரசியல் கட்சியை சார்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். மேலும் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக் கூறியிருந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், சீமான், திருமாவளவன், அண்ணாமலை, தமிழிசை என ஒவ்வொருவரது பெயரையும் தனித்தனியாக குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இதோடு, ’கலைத்துறையை சார்ந்தவர்கள், ஊடக நிறுவனங்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in