சமூகவலைதளங்களில் பரவிய வதந்தி... முற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜயின் பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.

தமிழகத்தில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சிறப்பிக்கும் வகையில் நடிகர் விஜய் இரண்டாவது ஆண்டாக கல்வி விருது வழங்கும் நிகழ்வினை நடத்தி வருகிறார். இதில் விழா தொடங்கியதுமே தனது பேச்சைத் தொடங்கி விட்டுதான் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்க ஆரம்பித்தார் விஜய்.

தனது பேச்சில் மாணவர்களை மறைமுக அரசியலில் ஈடுபட சொன்னவர், சோஷியல் மீடியாவில் வரும் தவறான செய்திகளை எல்லாம் நம்ப வேண்டாம் என்றும் அவற்றை எல்லாம் பகுத்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இந்த விஷயம்தான் விஜய் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகியுள்ளது.

அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகை த்ரிஷா அவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலர் சமூகவலைதளங்களில் விஜயின் அலுவலத்துக்கு அருகில் தான் த்ரிஷா வீடு வாங்கி இருக்கிறார் என்றும் TVK என்றாலே த்ரிஷா, விஜய், கீர்த்தி சுரேஷ்தான் என்றும் பலவாறு மீம் கிரியேட் செய்து சர்ச்சை கிளப்பினர்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகதான் நடிகர் விஜய் சமூகவலைதளங்களில் வரும் அனைத்து விஷயங்களையும் நம்ப வேண்டாம் என்று மறைமுகமாக கூறியிருக்கிறார் என சொல்லி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in