கள்ளக்குறிச்சி விவகாரம்... நடிகர் விதார்த் ஆதங்கம்!

கள்ளக்குறிச்சி விவகாரம்... நடிகர் விதார்த் ஆதங்கம்!
Updated on
1 min read

நடிகர் விதார்த் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்திய 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அரசியல் தலைவர்களும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விதார்த், ‘நாம்தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

'லாந்தர்’ விதார்த்
'லாந்தர்’ விதார்த்

நடிகர் விதார்த் நடிப்பில் இந்த வாரம் ‘லாந்தர்’ படம் வெளியாகி இருக்கிறது. இதற்காக, திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்தவர் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ‘’லாந்தர்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்திலும் கள்ளச்சாராயம் பற்றிய ஒரு காட்சியுடன் தான் படம் தொடங்கும்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்திருப்பது வருத்தமளிக்கிறது. இதில் யாரையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை. நம்மளை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in