காதலை உறுதிபடுத்தினார் நடிகர் சித்தார்த்… பார்ட்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

காதலை உறுதிபடுத்தினார் நடிகர் சித்தார்த்… பார்ட்னருக்கு பிறந்தநாள் வாழ்த்து!

நடிகை அதிதி ராவ் ஹைதாரியை காதலிப்பதை நடிகர் சித்தார்த் முதல்முறையாக உறுதிபடுத்தியுள்ளார்.

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் கடந்த 2021ம் ஆண்டு வெளியான மகாசமுத்திரம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதன்பிறகு இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சி, ஏ.ஆர்.ரஹ்மானின் மகளின் திருமண நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருவரும் சேர்ந்து வருவதை காண முடிந்தது. ஆனால் இருவரும் காதலிப்பதாக உறுதிபடுத்தவில்லை. காதலிக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் முதன்முறையாக அதிதி உடனான காதல் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நேற்று நடிகை அதிதி ராவ் ஹைதாரி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு நடிகர் சித்தார்த் வாழ்த்து தெரிவித்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த வாழ்த்து செய்தியில் நடிகர் சித்தார்த், பார்ட்னர் என்று குறிப்பிட்டிருந்தார். அதிதியின் தோளில் சாய்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து சித்தார்த் வாழ்த்து செய்தியுடன் தங்களது காதலையும் உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும் ஆங்கிலத்தில் கவிதை ஒன்றையும் சித்தார்த் எழுதி இருந்தார். அதற்கு நடிகை அதிதி, நீ இவ்வளவு அழகாக கவிதை எழுதுவாய் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டதே என்று கமெண்ட் செய்துள்ளார். இதன்மூலம் ரசிகர்களின் குழப்பத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதையடுத்து இருவருக்கும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் அடுத்த பேவரிட் ஜோடி கிடைத்துவிட்டார்கள் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in