நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படப்பிடிப்பு தொடங்கியது!

’கூலி’ ரஜினிகாந்த்
’கூலி’ ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே தொடங்க இருந்த இதன் படப்பிடிப்பு ‘வேட்டையன்’ படம் மற்றும் ‘கூலி’ ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளால் தாமதமானது.

‘கூலி’ என்ற டைட்டில் டீசர் பற்றிய அறிவிப்பில் ரஜினிகாந்த் ரெட்ரோ லுக்கில் இருந்தது அவரது ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. இதனால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதில் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தார்கள்.

இன்று ஆனி மாத அமாவாசை தினத்தையொட்டி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட ஒருவார காலத்திற்கு மட்டும் அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். அதன்பிறகு, வரும் 10ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். இதற்காக, பிரபல ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் - ரஜினி
லோகேஷ் கனகராஜ் - ரஜினி

இந்த செட்டில் முக்கிய காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். மேலும், இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனும் இணைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் படக்குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in