வெகேஷன் முடிஞ்சாச்சு... சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Updated on
1 min read

வெகேஷன் முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பியுள்ளார். இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெகேஷனுக்காக அபுதாபி கிளம்பினார். அங்கு அவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டது. இந்த பயணத்தில் பல முக்கியமான நபர்களையும் சந்தித்தார் ரஜினி.

அபுதாபி இந்து கோயிலில் ரஜினிகாந்த்
அபுதாபி இந்து கோயிலில் ரஜினிகாந்த்

கோல்டன் விசா தனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த லுலு குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் யூசுப் அலிக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார் ரஜினி. அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

அபுதாபியில் வெகேஷன் முடித்துள்ள ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னை திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் இருந்து ரஜினிகாந்த் வரும் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. ’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படப்பிடிப்பை முடித்துள்ளார் ரஜினி.

இதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. ‘கூலி’ படத்தை அடுத்து மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி ‘ஜெயிலர்2’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in