ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இமயமலையில் கெத்தா நின்ற சூப்பர் ஸ்டார்... ரஜினி ராக்ஸ்!

Published on

நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தின்போது அதன் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் தனது நண்பர்களுடன் இமயமலைக்கு பயணப்பட்டார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்போது இமயமலை முன்பு அவர் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ படத்தை முடித்திருக்கிறார் ரஜினி.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இதற்கடுத்ததாக, அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தனது ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு திரும்ப இருக்கிறார். இமயமலை, ஹரித்துவார் பயணத்திற்கு முன்னதாக ஒருவார காலம் அவர் அபுதாபி கிளம்பினார்.

’இந்தியன்2’
’இந்தியன்2’

இன்று நடக்கும் ‘இந்தியன்2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இமயமலை பயணத்தில் இருப்பதால் அதில் கலந்து கொள்ள மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது. சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ‘இந்தியன்2’ படத்தில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in