திருமண நிச்சயதார்த்தம் விழாவில் மணப்பெண்ணுடன் பாட்டு பாடி அசத்திய பிரேம்ஜி!

மணப்பெண்ணுடன் பிரேம்ஜி
மணப்பெண்ணுடன் பிரேம்ஜி

திருத்தணியில் நடந்த நிச்சயதார்த்தம் விழாவில் மணமகளுடன் நடிகர் பிரேம்ஜி பாட்டு பாடி அசத்தினார். இவர்களின் திருமணம் இன்று திருத்தணி முருகன் கோயிலில் நடக்கிறது. இவர்களுக்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமைக் கொண்டவர் கங்கை அமரன். அவரது மூத்த மகனான வெங்கட் பிரபு, முன்னணி திரைப்பட இயக்குநராக உள்ளார். தற்போது விஜய் நடிப்பில் 'GOAT'எனும் படத்தை இயக்கி வருகிறார். அவரது இரண்டாவது மகனான பிரேம்ஜி அமரன், நடிப்பு மற்றும் இசைத்துறையில் சிறந்து விளங்கி வருகிறார். அவருக்கு எப்போது திருமணம் என்று பல ஆண்டுகளாக ரசிகர்கள் கேட்டு வந்தனர். குடும்ப பாங்கான பெண் அமைந்தால் உடனடியாக திருமணம் செய்து கொள்வேன் என்று பிரேம்ஜி அமரன் சொல்லி வந்தார். இந்நிலையில், சேலத்தை சேர்ந்த இந்து என்கிற வங்கி ஊழியரை திருமணம் செய்ய உள்ளார்.

நிச்சர்யதார்த்தம் விழாவில் வெங்கட்பிரபு
நிச்சர்யதார்த்தம் விழாவில் வெங்கட்பிரபு

திருத்தணியில் உள்ள தனியார் மண்டபத்தில் பிரேம்ஜி அமரன் - இந்து ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இதில், கங்கை அமரன், வெங்கட் பிரபு, இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, சென்னை 28 படக்குழுவினர் என நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். நிச்சயதார்த்தம் நிகழ்வின்போது இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது பிரேம்ஜி அமரனும், மணப்பெண் இந்துவும் சேர்ந்து ஒரு பாடலை பாடி அசத்தினர். இதை உறவினர்கள், நண்பர்கள் கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.

மணப்பெண்ணுடன் சேர்ந்து பாட்டுப்பாடிய பிரேம்ஜி
மணப்பெண்ணுடன் சேர்ந்து பாட்டுப்பாடிய பிரேம்ஜி

நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படத்தை, இயக்குநர் வெங்கட்பிரபு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைப் பார்த்து அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனற். பிரேம்ஜி - இந்து ஆகியோரின் திருமணம் இருவீட்டாரின் முன்னிலையில் திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in