திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்; திரைத்துறையினர் வாழ்த்து!

நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்
நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம்

திருத்தணி முருகன் கோயிலில் எளிமையான முறையில் நடிகர் பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது. இதில், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் ஜெய், மிர்ச்சி சிவா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

தமிழ் சினிமாவில் இயக்குநர், பாடலாசியர், இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் கங்கை அமரன். அவரது மூத்த மகன் வெங்கட் பிரபு, முன்னணி இயக்குநராக உள்ளார். தற்போது விஜய் நடிப்பில் 'GOAT'படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இளைய மகனான பிரேம்ஜி அமரன், தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, பிரேம்ஜிக்கு திரைத்துறையினர் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

நடிகர் பிரேம்ஜி திருமண விழா
நடிகர் பிரேம்ஜி திருமண விழா

இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜி - இந்து ஜோடியின் திருமணம், இயக்குநரும் சகோதருமான வெங்கட் பிரபு முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் இன்று நடைபெற்றது. உறவுகள் அர்ச்சனை தூவ, இந்து கழுத்தில் தாலி கட்டினார் பிரேம்ஜி அமரன். இந்த திருமண விழாவில், கங்கை அமரன் மற்றும் மணமகள் வீட்டு குடும்பத்தார், திரைப்பட நடிகர்கள் மிர்ச்சி சிவா, ஜெய், சந்தான பாரதி, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

பிரேம்ஜி திருமண விழாவில் நடிகர் ஜெய் கலந்துக் கொண்டார்.
பிரேம்ஜி திருமண விழாவில் நடிகர் ஜெய் கலந்துக் கொண்டார்.

திருமணம் நடைபெற்ற பிறகு மணமக்கள் முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டனர். முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டன. திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற பிரேம்ஜி திருமணத்தில் பங்கேற்ற திரைப்பட நட்சத்திரங்களை காண பக்தர்கள் ஆர்வம் காட்டினர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in