‘கல்கி 2898 ஏடி’
‘கல்கி 2898 ஏடி’

'கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிக்க யோசித்த கமல்ஹாசன்... உண்மையை உடைத்த பிரபாஸ்!

நடிகர் கமல்ஹாசன் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிக்க யோசித்ததாக நடிகர் பிரபாஸ் பேசியிருக்கிறார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இந்தப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருக்கிறார். பான் இந்திய படமாக நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழு படம் பற்றி பேசியுள்ளது.

'கல்கி 2898 ஏடி’
'கல்கி 2898 ஏடி’

அந்தப் பேட்டியில் நடிகர் கமல்ஹாசன் ‘கல்கி 2898 ஏடி’ படத்தில் நடிக்க யோசித்ததாக நடிகர் பிரபாஸ் பேசியிருக்கிறார். ”இந்தப் படத்தில் நடிக்க கமல் சார் கிட்டத்தட்ட ஒரு வருடம் யோசித்தார். இதனால், அவரை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொன்னேன்” என்றார்.

இதைக் கேட்ட நடிகர் கமல்ஹாசன் உடனே, “தொந்தரவு எல்லாம் இல்லை! இந்தக் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. பிரபாஸ், அமிதாப் எல்லாம் இருக்கும்போது நான் என்ன செய்யப் போகிறேன் என்ற கேள்வி இருந்தது.

‘கல்கி 2898 ஏடி’
‘கல்கி 2898 ஏடி’

இதற்கு முன்பு நான் கெட்டவனாக நடித்ததே இல்லை என்று சொல்ல வரவில்லை. கெட்ட ஹீரோவாக சைக்கோவாக நடித்திருக்கிறேன். ஆனால், இதில் என்னுடைய கதாபாத்திரமே வேறு. அது படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்” என்றார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in