மூத்த மகனுக்குத் திருமணம்... நடிகர் நெப்போலியன் பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி!

குடும்பத்துடன் நெப்போலியன்...
குடும்பத்துடன் நெப்போலியன்...

நடிகர் நெப்போலியன் தனது மூத்த மகனுக்குத் திருமணம் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருக்கிறார்.

‘சீவலப்பேரி பாண்டி’, ‘எட்டுப்பட்டி ராசா’, ’விருமாண்டி’, ‘ஐயா’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர் நடிகர் நெப்போலியன். ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் எனப் பல பரிணாமங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு அமெரிக்காவில் ஒரு ஐடி கம்பெனி நடத்தி வருகிறார்.

குறிப்பாக, தனுஷ் மற்றும் குணால் என்ற தனது இரு மகன்களுடன் நேரம் செலவிட்டு வருகிறார். இதில் மூத்த மகன் தனுஷிற்கு திருமணம் நடக்க இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

திருமண நிச்சயதார்த்தத்திற்கான அழைப்பை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘அன்புள்ள நண்பர்களே,
தமிழ்ச் சொந்தங்களே, ஜூலை2ஆம் நாள் நேற்று காலையில் எனது சகோதரர்களுடன் சென்று, நமது
மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களை சந்தித்தோம்.

குடும்பத்துடன் நெப்போலியன்
குடும்பத்துடன் நெப்போலியன்

எனது மூத்த மகன் தனுஷூக்கும் அக்‌ஷயா என்கிற பெண்ணுக்கும் நடைபெற இருக்கின்ற திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை
வழங்கி வாழ்த்துக்களை பெற்ற மகிழ்வான தருணம்!’ எனக் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in