கார்த்தியின் ‘சர்தார்2’ படத்தின் கதாநாயகி இவரா? - வெளியான தகவல்!

 ‘சர்தார்2’
‘சர்தார்2’

நடிகர் கார்த்தியின் ‘சர்தார்2’ படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பவர் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2022ல் வெளியான படம் ‘சர்தார்’. இதில் நடிகர்கள் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக அப்போதே இயக்குநர் மித்ரன் அறிவித்தார்.

’சர்தார்’ கார்த்தி
’சர்தார்’ கார்த்தி

இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், இதில் கதாநாயகியாக நடிப்பவர் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் தொடங்கும் படப்பிடிப்பில் ஆஷிஷா ரங்கநாத் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறாராம். இவர் பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இதற்கு முன் அதர்வா முரளியுடன் ‘பட்டத்து அரசன்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

ஆஷிஷா ரங்கநாத்
ஆஷிஷா ரங்கநாத்

’பட்டத்து அரசன்’ படத்திற்குப் பிறகு இவர் நடிக்கும் தமிழ்ப் படம் ‘சர்தார்2’ என்பது குறிப்பிடத்தக்கது. ’சர்தார்1’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ‘சர்தார்2’ படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in