‘இது 2வது சுதந்திர போர்’ - கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ டிரெய்லர் வெளியானது!

'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன்
'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன்2’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள ‘இந்தியன்2’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 28 வருடங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியானது. அப்போது, இந்தியன் தாத்தா கெட்டப்பில் நடிகர் கமல்ஹாசனை பார்த்தபோது எந்த மாதிரியான சிலிர்ப்பு இருந்ததோ அதே சிலிர்ப்பு இப்போதும் இருந்ததாக இயக்குநர் ஷங்கர் பேசி இருக்கிறார்.

இப்போது, இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. இப்போது நாட்டில் நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்க இந்தியன் தாத்தா திரும்ப வந்தால் எப்படி இருக்கும் என்ற கருவை மையமாகக் கொண்டுதான் ‘இந்தியன்2’ திரைக்கதை உருவாகி இருக்கிறது.

நடிகர் சித்தார்த் சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை ஊடகங்கள் மூலம் எடுத்து சொல்பவராக வருகிறார். இந்தக் கொடுமைகளை எல்லாம் தட்டிக் கேட்க ஒருத்தர் இருந்தார். அவர் மீண்டும் வர வேண்டும் என சேனாதிபதி இந்தியன் தாத்தா பற்றி டிரெய்லரில் கதை சொல்கிறார்.

‘இந்தியன்’ படத்தில் ஒரே ஒரு இந்தியன் தாத்தா கெட்டப் மட்டுமே வரும். ஆனால், இந்த டிரெய்லரில் கமல்ஹாசன் பல இந்தியன் தாத்தா கெட்டப்பில் வருகிறார். அதோடு, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என பிக் பாஸ் வசனத்தையும் பேசியிருக்கிறார். மற்றபடி, இயக்குநர் ஷங்கரின் வழக்கமன பிரம்மாண்ட காட்சிகளும் கதை சொல்லலும் இருக்கிறது. 'இந்தியன்' கதை தமிழகத்தில் நடந்திருக்கும். ஆனால், 'இந்தியன் 2' கதை தமிழகம் தாண்டி பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in