வைரல் வீடியோ: மனைவியை கயிறு கட்டி இழுக்கும் கெளதம் கார்த்திக்!

வைரல் வீடியோ: மனைவியை கயிறு கட்டி இழுக்கும் கெளதம் கார்த்திக்!

மனைவி மஞ்சிமா மோகன் உடற்பயிற்சி செய்ய அவரது கணவர் கவுதம் கார்த்திக் உதவி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடல் படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக், என்னமோ ஏதோ, வை ராஜா வை, ரங்கூன், தேவராட்டம், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதே போல், அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.

கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன்
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன்

இவர் களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் 2019ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்திலிருந்தே காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற இவர்களது திருமண நிகழ்வில் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமண நிகழ்வு
கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் திருமண நிகழ்வு

திருமணத்திற்கு பிறகு மஞ்சிமா படங்களில் நடிக்க கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில், திருமணத்தின் போது அதிகமாக வெயிட் போட்டிருந்த மஞ்சிமா, தற்போது உடல் எடையை குறைக்க தீவிரமாக ஒர்க் அவுட் செய்து வருகிறார்.

இது தொடர்பான வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் கௌதம் கார்த்திக் ஒர்க் அவுட் செய்ய தனது மனைவிக்கு உதவும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மஞ்சிமா புஷ் அப் செய்ய அவரது இடுப்பில் ரோப் கட்டி அதனை தூக்கி அவருக்கு உடற்பயிற்ச்சி செய்ய உதவுகிறார் கௌதம் கார்த்திக். இந்த வீடியோவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர். கிடைத்தால் இது போன்ற கணவர் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகள் குவிகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in