நடிகர் தனுஷின் ‘ராயன்’ பட இசை வெளியீட்டு விழா...வெளியான சூப்பர் அப்டேட்!

'ராயன்’ தனுஷ்
'ராயன்’ தனுஷ்

நடிகர் தனுஷின் ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகியுள்ளது ‘ராயன்’. இந்தப் படத்தை தனுஷே இயக்கி, நடித்துள்ளார். தனுஷூடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். படம் அடுத்த மாத இறுதியில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான புரோமோஷனைப் படக்குழு தீவிரமாகத் தொடங்கியுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் இருந்து ‘அடங்காத அசுரன்’, ‘வாட்டர் பாக்கெட்’ ஆகிய பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது, படத்தின் ஆடியோ லான்ச் பற்றி படக்குழு அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘ராயன்’ படத்தை அடுத்து ‘குபேரா’ மற்றும் ‘இளையராஜா’ ஆகிய படங்களை தனுஷ் கைவசம் வைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in