நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

‘கேப்டன் மில்லர்’
‘கேப்டன் மில்லர்’

நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு லண்டனில் தேசிய விருது கிடைத்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி இந்தப் படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் சுமார் ஐம்பது கோடி ரூபாய்க்கும் அதிகமாக கலெக்‌ஷன் அள்ளியது.

இந்தப் படத்திற்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதாவது, லண்டன் தேசிய விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு படத்துக்கான பிரிவில் விருது வென்றுள்ளது ‘கேப்டன் மில்லர்’.

இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி, ‘’கேப்டன் மில்லர்’ படக்குழுவின் ஒட்டுமொத்த அணியினரின் கடின உழைப்பிற்கு கிடைத்துள்ள வெற்றி இது. இந்தப் பட உருவாக்கத்தில் இருந்த அனைவருக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளது.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்

‘கேப்டன் மில்லர்’ படத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக்கில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாது, ‘குபேரா’, 'ராயன்’ ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in