சூப்பர் ஸ்டாருடன் கேமியோவில் அட்லி... வெளியான தகவல்!

அட்லி
அட்லி

’ராஜா ராணி’ புகழ் இயக்குநர் அட்லி தனது அடுத்தப் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் கேமியோவில் நடித்திருக்கிறார்.

’ராஜா ராணி’, ‘தெறி’ உள்ளிட்டப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அட்லி பாலிவுட்டில் ‘ஜவான்’ படம் மூலம் அங்கும் தனக்கான இடத்தைப் பிடித்தார். முதல் படத்திலேயே ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான வசூல் செய்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களுக்கு பிடித்த இயக்குநரானார்.

'பேபி ஜான்’
'பேபி ஜான்’

அடுத்து அவர் என்ன படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருக்கிறது. அல்லு அர்ஜூன், மீண்டும் ஷாருக்கான் எனப் பல ஹீரோக்களின் பெயர்கள் அடிபட்டாலும் அட்லி இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

சல்மான் கான்
சல்மான் கான்

படங்கள் இயக்குவது மட்டுமல்லாது, படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் அட்லி. விஜயை வைத்து தமிழில் அவர் இயக்கிய ‘தெறி’ படம் இந்தியில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. இந்தப் படத்தில்தான் அட்லி கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இவரோடு பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடிக்கிறார் என்பதுதான் ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in