ஜூலையில் வெளியாகிறது பாலாவின் ‘வணங்கான்’!

‘வணங்கான்’
‘வணங்கான்’

பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் ‘வணங்கான்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது.

இயக்குநர் பாலா நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘வணங்கான்’ படம் மூலம் இயக்கத்திற்கு திரும்பி இருக்கிறார். இந்தப் படத்தில் முதலில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமானார். முதல் ஷெட்யூல் அந்த வாய்ப்பு அருண் விஜய்க்குப் போனது. பாலா- சூர்யா இடையே ஏற்பட்ட பிரச்சினையே சூர்யா படத்தில் இருந்து விலக முக்கியக் காரணம் என சொல்லப்பட்டது.

’வணங்கான்’ படத்தில் அருண் விஜய்...
’வணங்கான்’ படத்தில் அருண் விஜய்...

கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருந்தார். அவரும் தேதி பிரச்சினைகளால் ஒதுங்கினார். இந்தப் படத்தில் நடித்த ’பிரேமலு’ கதாநாயகி மமிதா மூன்று டேக் வாங்கியதால் பாலா தன்னை அடித்ததாகச் சொன்ன வீடியோவும் வைரலானது.

படத்தின் போஸ்டர், கிளிம்ப்ஸ் பார்த்த ரசிகர்கள் இந்தப் படம் இன்னொரு ‘பிதாமகன்’ போல இருக்கிறது என்று சொல்லி வருகின்றனர். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படம் ஜூலை மாதம் வெளியாகிறது என்று இதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஜூலை மாதம் கமலின் ‘இந்தியன்2’, தனுஷின் ‘ராயன்’ படங்களும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in