ரிலீஸ் தள்ளிப் போகும் ‘புஷ்பா2’... அப்செட்டில் ரசிகர்கள்!

’புஷ்பா2’ டீசரில் அல்லு அர்ஜூன்...
’புஷ்பா2’ டீசரில் அல்லு அர்ஜூன்...

நடிகர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா2’ திரைப்படம், திட்டமிட்டிருந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் தள்ளிப் போகிறது என்ற செய்தி ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா’ படத்தின் சீக்வலான ‘புஷ்பா2’ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாக இருக்கிறது என்பதை படக்குழு அறிவித்தது. அதற்கான புரோமோஷன் பணிகளையும் படக்குழு தீவிரமாகத் தொடங்கியது. ‘புஷ்பா புஷ்பா...’ என்ற முதல் பாடலும் ராஷ்மிகா- அல்லு அர்ஜுனுக்கான இரண்டாவது காதல் பாடலும் சமீபத்தில் வெளியாகி ஹிட்டானது.

’புஷ்பா2’
’புஷ்பா2’

இதனால், படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் 15 ரிலீஸ் என்பதால் பல படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்திருந்தன. ஆனால், இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்னும் நிறைவடையாததால், புஷ்பா2 பட ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பயணம் தொடங்கியது... ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி இன்று புறப்படுகிறார் மோடி!

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டியில் பரபரப்பு... 23 கிலோ வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்வு... 41 பேர் இந்தியர்கள்!

அதிர்ச்சி வீடியோ... பெட்ரோல் நிரப்பும் போது செல்போன் பயன்பாடு: தீப்பிடித்ததால் அலறிய வாகன ஓட்டி!

இரண்டாவது திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட சீரியல் நடிகை... ரசிகர்கள் வாழ்த்து!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in