நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி’ படத்தின் முதல் பார்வை... வெளியான சூப்பர் அப்டேட்!

அஜித்தின் ‘விடாமுயற்சி’
அஜித்தின் ‘விடாமுயற்சி’

நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் நாளை மாலை வெளியாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில், இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டிருக்கு இந்தப் படத்தின் கடைசி ஷெட்யூல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜர்பைஜானில் தொடங்கியது.

இதன் ஸ்டண்ட் காட்சிகள் எப்படி உருவாகிறது என்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. நாளை மாலை 7.03 மணிக்கு படத்தின் அப்டேட்டை லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

படத்தின் முதல் பார்வைதான் வர இருக்கிறது என ரசிகர்கள் உற்சாகமாக அப்டேட் பகிர்ந்து வருகின்றனர். ’‘விடாமுயற்சி’ படத்திற்கு அடுத்து நடிகர் அஜித் நடிக்க ஆரம்பித்த ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து முதல் மற்றும் இரண்டாம் பார்வையே வெளியாகி விட்டது.

'விடாமுயற்சி’ அஜித்- த்ரிஷா
'விடாமுயற்சி’ அஜித்- த்ரிஷா

ஆனால், ‘விடாமுயற்சி’ அப்டேட் வரவில்லை’ எனப் பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இந்த கேள்விக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் அப்டேட் கொடுத்தக் தொடங்கியுள்ளது படக்குழு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in