அஜித்தின் ’குட் பேட் அக்லி’ முதல் ஷெட்யூல் முடிந்தது... சூப்பர் அப்டேட்!

’குட் பேட் அக்லி’
’குட் பேட் அக்லி’

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது.

’விடாமுயற்சி’ படத்தை அடுத்து நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துள்ளார். அடுத்த வருடம் பொங்கல் விடுமுறைக்கு இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

அஜித் குமார்
அஜித் குமார்

கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளோடு துவங்கியது. படத்தில் இருந்து அஜித்தின் ஸ்மார்ட் லுக்கும், ஹைதராபாத்தில் அவர் பைக் ஓட்டிய வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. முதல் ஷெட்யூலில் படமாக்கப்பட்ட அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கலோயன் கோரியோகிராஃபி செய்திருக்கிறார்.

குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி

இதோடு ஒரு மாஸ் குத்து பாடலும் படமாக்கப்பட்டு இருக்கிறது. இதனை கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இனி பெண்டிங்கில் உள்ள ’விடாமுயற்சி’ படத்தின் மீதமுள்ள முடிந்ததும் அடுத்த ஷெட்யூல் தொடங்குமாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in