வெயில் கொடுமை... ஏ.சி காற்றில் குறட்டை விட்ட கொள்ளையன்: வைரலாகும் வீடியோ!

உறங்கும் கொள்ளையன்.
உறங்கும் கொள்ளையன்.

அரசு ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையன், ஏ.சி காற்றில் அசந்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உத்ததரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அரசு ஊழியர் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க வந்த கொள்ளையன் ஏ.சி (குளிர்சாதனம்) காற்றின் சுகத்தில் அசந்து உறங்கிய சம்பவம் தான் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இந்திரா நகர் செக்டார் 20-ல் உள்ள அரசு ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க கொள்ளைக்கும்பல் வந்துள்ளது. அரசு ஊழியர் வீட்டில் இருந்த அனைத்தை பொருட்களையும் அந்தக் கும்பல் திருடியுள்ளது.

அப்போது அதில் ஒரு கொள்ளையின் ஏ.சி காற்றில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று கூறியுள்ளார். அப்படி ஓய்வெடுத்தவர் அசந்து தூங்கி விட்டார். இதனால் அவரை விட்டு விட்டு மற்ற கொள்ளையர்கள் தப்பி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், கொள்ளை நடந்த வீட்டிற்குச் சென்றனர். அப்போது கொள்ளையன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்.

அவரை உறக்கத்தில் இருந்து போலீஸார் எழுப்பியுள்ளனர். அவர் கண்விழித்துப் பார்த்த போது எதிரே போலீஸார் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தன்னுடன் வந்த கும்பல், தன்னை விட்டு விட்டு எஸ்கேப்பானதை உணர்ந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது கும்பலாக கொள்ளையடிக்க வந்ததாகவும், வெயிலின் தாக்கம் தாளாமல் ஏ.சி குளிர்ச்சியால் சிறிது நேரம் உறங்கலாம் என படுத்ததாகவும், அதனால் அப்படியே உறங்கி விட்டதாகவும் கொள்ளையன் கூறினார். அவரை கைது செய்த போலீஸார் அவருடன் வந்த கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையடிக்க வந்த வீட்டில் கொள்ளையன் அசந்து உறங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," இந்த வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்ற கொள்ளையர்களையும் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in