ஒரு கையில் குழந்தை... மறு கையில் கடமை... போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு!

குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்யும் காவலர்
குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்யும் காவலர்

திருவாரூரில், பணி முடித்து ஆப் டூட்டியில் இருந்தாலும் கையில் குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருவாரூர் நகர சட்டம் - ஒழுங்கு காவலராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது பணியை முடித்து விட்டு, தனது மனைவி, குழந்தையுடன் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் விளமல் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது விளமல் கல்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலாக இருந்தது. வாகனங்கள் ஒன்றுக்கொன்று தாறுமாறாக நின்றதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

காவலர் மணிகண்டன்
காவலர் மணிகண்டன்

திருவாரூர் நகரின் மையபகுதிக்கு நுழையும் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் விளமல் கல்பாலம் அருகே உள்ள பாலம் வழியாக செல்லவேண்டிய நிலை இருப்பதால் திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலை விளமல் கல்பாலம் அருகில் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் மணிகண்டன்
போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் மணிகண்டன்

இதுதவிர மன்னார்குடி சாலை மார்க்கமாக திருவாரூர் நகருக்கு வரும் வாகனங்களும் அணிவகுத்த காரணத்தால், திருச்சி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாக விளமல் கல்பாலம் அருகில் போக்குவரத்தை சரிசெய்வதற்காக காவலர்கள் பணியமர்த்தப்படுவது வழக்கம். ஆனால், அப்போது அங்கு யாரும் பணியில் இல்லை.

இந்த சூழ்நிலையை அறிந்து, கைக்குழந்தையுடன் மணிகண்டன், சாலையின் இருபுறமும் அணிவகுந்து நின்ற வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக வரவைத்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்தார். பச்சிளம் குழந்தையோடு காவலர் மணிகண்டன் சாலையின் இருபுறமும் மாறி மாறிச் சென்று, போக்குவரத்தை சரிசெய்த காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in