மனைவி மீது சந்தேகம்… மகளைக் கொன்ற சைக்கோ தந்தை!

மனைவி மீது சந்தேகம்… மகளைக் கொன்ற சைக்கோ தந்தை!

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் பெற்ற மகளை அவரது தந்தை பாறாங்கல் மீது மோதி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரகாசம் மாவட்டம் மார்கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பூசிராஜு, நரசம்மா தம்பதிக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். பூசிராஜு மது, கஞ்சாவுக்கு அடிமையாகி மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் நரசம்மா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வந்து தனது சகோதரருடன் வேலைக்கு சென்று வந்தார். அப்போது தனது மூத்த மகள் மஞ்சுளாவை (13) பள்ளியில் விட்டுச் செல்வது வழக்கம். வேலை முடிந்து மாலையில் அழைத்து வருவார்.

இந்நிலையில் மகளை அழைக்க பள்ளிக்கு சென்ற போது, அவர் ஏற்கனவே அவரது தந்தையுடன் சென்று விட்டதாக பள்ளியில் தெரிவித்தனர். இதனால் நரசம்மா பதற்றம் அடைந்தார். இதனிடையே பூசிராஜு மகளை பாறை இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று அதில் மோதி கொலை செய்தார்.

இதையடுத்து நரசம்மா, மகளின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஏற்கனவே மாதத்திற்கு ஒரு குழந்தையை கொன்று விடுவேன் என்று கணவன் கூறியதாக தெரிவித்த மனைவி, இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீஸார் மகளை பூசிராஜூ அழைத்துச் சென்றதை உறுதி செய்தனர். இதையடுத்து தப்பிச் சென்ற அவரை கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in