ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் பணிபுரியும் இந்தியாவின் இளம் மேயர்!

ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் பணிபுரியும் இந்தியாவின் இளம் மேயர்!

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், தனது ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் இளம் மேயராக ஆர்யா ராஜேந்திரன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா ராஜேந்திரன் (24) கடந்த 2020-ம் ஆண்டு, தனது 21வது வயதில் நாட்டின் இளம் மேயராகப் பதவியேற்றார். இவர் சிபிஐ(எம்) எம்எல்ஏவான சச்சின் தேவ் என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் ஆர்யா ராஜேந்திரன், திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் பணியாற்றும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

கையில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்க, ஆர்யா கோப்புகளை பார்த்து கையொப்பம் இடுகிறார். இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் ஆர்யாவை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தாய்மை என்பது ஒரு பெண்ணின் தொழில் மற்றும் லட்சியங்களுக்கு இடையூறாக இருக்காது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலர் விமர்சனமும் செய்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in