அதிர்ச்சி... மாநகராட்சி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை!

அதிர்ச்சி... மாநகராட்சி ஊழியர் விஷம் குடித்து தற்கொலை!

திருச்சி மாநகராட்சியில் பில் கலெக்டராக வேலை செய்த நபர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (34) என்பவர்  திருச்சி மாநகராட்சியில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மணிமேகலை என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணேஷ் பல இடங்களில் கடன் வாங்கியதாக தெரிகிறது.

ஆனால் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த சூழலில் மதிய வேளையில் வீட்டிற்கு வந்த அவர், திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கேட்டபோது எலி மருந்தை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக கணேஷை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், சிகிச்சை பலன் அளிக்காமல் கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in