இரவில் வீடியோ கால் செய்து ஆபாசமாக பேசுகிறார்... அரசு அதிகாரி மீது பரபரப்பு புகார்!

அரசு மருத்துவ அதிகாரி ராபர்ட் ரெபெல்லோ
அரசு மருத்துவ அதிகாரி ராபர்ட் ரெபெல்லோ

இரவில் வீடியோ கால் செய்து ஆபாசமாக பேசுவதாகவும், உடல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் அரசு மருத்துவமனை அதிகாரி மீது சக பெண் ஊழியர் ஒருவர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டம் குந்தாப்பூர் தாலுகாவில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக ராபர்ட் ரெபெல்லோ என்பவர் உள்ளார். இவர் மீது தான் குந்தாப்பூர் காவல் நிலையத்தில், மருத்துவமனையில் பணிபுரியும் பெண் ஊழியர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண் இந்த மருத்துவமனையில் என்ஆர்சி பிரிவில் பணியாற்றும் இந்த பெண் அதிகாரி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.

அதில், மருத்துவமனையில் அதிகாரியாக உள்ள ராபர்ட் ரெபல்லோ கடந்த 9 மாதங்களாக உடல் ரீதியாக பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறியுள்ளார். அத்துடன் இரவில் வீடியோ கால் செய்து ஆபாசமாக பேசுவதுடன், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார். பணி நேரத்தில் மட்டுமின்றி அதற்குப் பிறகும் போன் செய்து ஆபாசமாக பேசி மனரீதியாக துன்புறுத்துகிறார். இதனால் பெரும் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே, மருத்துவ அதிகாரி ராபர்ட் ரெபெல்லோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.

அந்த புகாரை குந்தாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தினர். இதன் பின் மருத்துவ அதிகாரி ராபர்ட் ரெபெல்லோ மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in