அதிர்ச்சி! கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

அதிர்ச்சி! கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெற்றிவேந்தன் - புனிதா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரித்திகா (18) காங்கேயத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். வெற்றிவேந்தன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் புனிதா வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்த போது, மகளின் அறை உள்பக்கம் பூட்டப்பட்டு இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

உள்ளே மூத்த மகள் ரித்திகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்தார். உடனடியாக அவரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போதும் மகளும் இறந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in