அதிர்ச்சி… தென்னை மரம் முறிந்து விழுந்து இளம்பெண் பலி!

அதிர்ச்சி… தென்னை மரம் முறிந்து விழுந்து இளம்பெண் பலி!

கோவை அருகே தொண்டாமுத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நரசீபுரம் பூண்டி சாலையை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மகள் இளமதி (17) தொண்டாமுத்தூரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருக்கு நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் பெற்றோருக்கு உதவி செய்ய சென்றுள்ளார்.

தாய், தந்தை வேலை செய்யும் தோட்டத்திற்கு சென்று இளமதி பசுந்தீவனத்தை எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த தென்னை மரம் முறிந்து இளமதி மீது விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த இளமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆலாந்துறை காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in