நெகிழ்ச்சி! உயர் ரத்த அழுத்தம் திடீரென மயங்கிய பஸ் டிரைவர்... 40 பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சி!

நெகிழ்ச்சி! உயர் ரத்த அழுத்தம் திடீரென மயங்கிய பஸ் டிரைவர்... 40 பயணிகளை காப்பாற்றிய நெகிழ்ச்சி!

உதகை அருகே உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்ட நிலையில், மயக்க நிலையை உணர்ந்த பேருந்து ஓட்டுநர், உடனடியாக சுதாரித்துக் கொண்டு 40 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு போக்குவரத்து கழக கிளையிலிருந்து நேற்று மதியம் கீழ்குந்தா கிராமத்திற்கு அரசுப்பேருந்து ஒன்று புறப்பட்டது. கீழ்குந்தா கிராமத்தைச் சேர்ந்த சிவா (48) என்பவர் பேருந்தை இயக்கினார். 40 பயணிகளுடன் பேருந்து குன்னூர் - மஞ்சூர் இடையே சென்று  கொண்டிருந்தது.

அப்போது ஓட்டுநர் சிவா சோர்வடைந்து பேருந்தை மெதுவாக இயக்கினார். உடல்நிலையில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்த அவர் திடீரென மயக்கம் வருவதையறிந்து, பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். அதன் பின்னர், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு அவர் இருக்கையிலேயே மயங்கி சாய்ந்தார்.

இதையடுத்து பயணிகள் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மருத்துவமனையில் ஓட்டுநர் சிவாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு நலம் அடைந்தார்.

உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதை உணர்ந்த ஓட்டுநர் சிவா துரிதமாக செயல்பட்டு, உடனடியாக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவரது செயலால் 40 பயணிகள் பாதுகாக்கப்பட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in