ஆபாச வீடியோ காட்டி சிறுமிக்குப் பாலியல் தொல்லை...ரயிலில் நடந்த பயங்கரம்!

ரயில்
ரயில்

ரயிலில் பயணம் செய்த 14 வயது சிறுமியை இளைஞர் ஒருவர், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன் ஆபாச வீடியோக்களைப் பார்க்க காட்டி கட்டாயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது பாட்டியுடன் ரயிலில் பயணம் செய்த 14 வயது சிறுமிக்கு ஆண் பயணி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் ஆபாச வீடியோக்களைப் பார்க்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அத்துடன் ஆபாசமான சைகைகள் மூலம் அந்த சிறுமியை துன்புறுத்தியுள்ளார்.

மங்களா எக்ஸ்பிரஸ்
மங்களா எக்ஸ்பிரஸ்

மத்தியப்பிரதேச மாநிலம், இடார்சி-போபால் செல்லும் மங்களா எக்ஸ்பிரஸின் இரண்டாம் வகுப்பு ஏசி கோச் ஏ-1-ல் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பயந்து போன சிறுமி, தொல்லை தாங்க முடியாமல் பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமி அரசு ரயில்வே போலீஸ் (ஜிஆர்பி) கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். ரயில் பினாவை அடைந்ததும், ஜிஆர்பி அதிகாரிகள் வந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, வழக்குப் பதிவு செய்ய ரயிலில் இருந்து இறங்குமாறு சிறுமியை அறிவுறுத்தினர். ஆனால், அந்த சிறுமி ரயிலில் இருந்து இறங்க மறுத்துவிட்டாள்.

இறுதியாக சிறுமி குவாலியருக்கு வந்து தனது தந்தையைச் சந்தித்து, அங்குள்ள ஜிஆர்பி நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ராணி கமலாபதி ஸ்டேஷனில் நடந்ததால், குவாலியர் ஜேஐஆர்பி ஸ்டேஷன் வழக்கு பதிவு செய்து, மேல் நடவடிக்கைக்காக ராணி கமலாபதி ஸ்டேஷன் ஜிஆர்பிக்கு மாற்றப்பட்டது.

ரயில்
ரயில்

பாலியல் துன்புறுத்தல் என்பது சிறுமிகளுக்கு மட்டும் அல்ல. இந்த ஆண்டு மே மாதம், 16 வயது சிறுவன் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணித்தபோது ஒரு சம்பவம நடந்தது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. சமய்பூர் பட்லி நோக்கிச் செல்லும் ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய பிறகு, சக பயணிகள் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுவன் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in