இந்தியாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை; உயிரிழப்பு 87 ஆக அதிகரிப்பு

வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழப்பு
வெப்ப அலை தாக்கத்தால் உயிரிழப்பு

இந்தியாவில் வெப்ப அலை தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வடமாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வெப்ப அலை தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் தென் மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க வகையில் வெப்பத்தின் தாக்கம் நிலவுகிறது. வெப்ப அலை மற்றும் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் நேற்று வரை 54 பேர் உயிரிழந்தனர்.

கோடை வெப்பம்
கோடை வெப்பம்

இந்நிலையில் இன்று வெப்ப வாத உயிரிழப்பு மேலும் அதிகரித்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் படி, மேற்கு ஒடிசாவில் மேலும் 19 பேர், உத்தரப் பிரதேசத்தில் 16 பேர், பீகாரில் 5 பேர், ராஜஸ்தானில் 4 பேர் மற்றும் பஞ்சாபில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர மற்ற மாநிலங்களிலும் வெப்ப அலை உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஹரியாணா, சண்டிகர் - டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகள், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானின் சில பகுதிகள், உத்தராகண்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வெப்ப அலை மற்றும் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை தாக்கத்தால் மயங்கி விழுந்த தேர்தல் அலுவலர் (கோப்பு படம்)
வெப்ப அலை தாக்கத்தால் மயங்கி விழுந்த தேர்தல் அலுவலர் (கோப்பு படம்)

நேற்று நாட்டிலேயே கான்பூரில் (மேற்கு உத்தரப் பிரதேசம்) அதிகபட்சமாக 48.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதற்கிடையே கடந்த மே 29 அன்று டெல்லியின் முங்கேஷ்பூர் வானிலை நிலையத்தில் 52.9 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், வெப்பநிலை பதிவிடும் கருவியின் சென்சார் செயலிழந்ததால் இத்தகைய தவறான வெப்ப அளவு தெரிவிக்கப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in