எச்சரிக்கை... இடி, மின்னலுடன் இந்த 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

கனமழை
கனமழை

மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி உள்பட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அளவு அதிகாலையில் இருந்து கூடி வருகிறது. இதனால் சராசரி வெப்பநிலையை விட கூடுதல் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய இன்று வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறக்கையில், " மேற்கு திசைக் காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறியுள்ளது.

அதன்படி, " நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in