டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி: இடி மின்னலுடன் கனமழை பெய்ய 70 சதவீதம் வாய்ப்பு!

கிரிக்கெட் மைதானம்
கிரிக்கெட் மைதானம்

தென்னப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் நாளை மோதும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டி போட்டி இறுதிப்போட்டியின் போது 70 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கான கவுன்டன் தொடங்கியுள்ளது. நாளை (ஜூலை 29) பார்படாஸில் தென்னப்பிரிக்கா, இந்திய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இறுதிப்போட்டி நடக்கும் நாளை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இறுதிப்போட்டி
இறுதிப்போட்டி

இங்கிலாந்து, இந்தியா அரையிறுதிப்போட்டியிலும் மழை குறுக்கிட்டது. தற்போது இறுதிப்போட்டியின் போது 70 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டி திட்டமிட்டப்படி நடக்கவில்லை என்றால், இரு அணிகளும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும். கடந்த 2002-ம் ஆண்டு இலங்கையில் நடந்த சாம்பியன் டிராபியின் இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டது. அப்போது இந்தியா- இலங்கை ஆகிய இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கொழும்பில் நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 244 ரன்கள் எடுத்தது. இந்தியா விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்த போது பலத்த மழை பெய்தது. மழை இடைவேளையின்றி ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு இரு அணிகளும் கூட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இப்போது, டி 20-ல் ​​இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டி முழுமையடையவில்லை என்றால், இந்த அணிகளும் கூட்டு சாம்பியனாகும். இரண்டாவது கோப்பையை இந்தியா வென்றால், தென் ஆப்ரிக்கா முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறும்.

இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இதுவரை 26 முறை டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 14 ஆட்டங்களிலும், தென்னாப்பிரிக்கா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் யாருக்கும் வெற்றி, தோல்வி கிடைக்கவில்லை. டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா 2 போட்டிகளில் வெற்றி பெற்றது.

பார்படாஸ் வந்தடைந்த இந்திய அணி
பார்படாஸ் வந்தடைந்த இந்திய அணி

கடந்த 2022- ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா அணி பார்படாஸ் வந்தடைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in