12 மணி நேரமாக துப்பாக்கிச் சண்டை... 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

பாதுகாப்புப் படையினர்
பாதுகாப்புப் படையினர்

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதோடு, 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக நக்சல்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் உள்ள கோபல் வனப்பகுதி அருகே நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

பாதுகாப்புப் படையினர்
பாதுகாப்புப் படையினர்

அப்போது திடீரென அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதற்குப் பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர் சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் உடல்கள்
சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் உடல்கள்

இவர்களிடமிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக பாதுகாப்புப் படையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு துப்பாக்கிச் சூடு நிறைவடைந்துள்ளபோதும், அங்கு மேலும் சில நக்சலைட்டுகள் பதுங்கியிருக்கலாம் என்கிற சந்தேகம் பாதுகாப்புப் படையினரிடம் உள்ளது.

எனவே, அப்பகுதி முழுவதும் தீவிர சோதனையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே படுகாயம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு ராய்ப்பூருக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in